உடற்பயிற்சி நன்மைகள்
உடற்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க தினமும் இந்த உடற்பயிற்சி செய்யலாம்.
நீட்சி
தினமும் கை, கால்களை நீட்டி நிமிர்த்தும் நீட்சி உடற்பயிற்சி செய்யலாம். இது உடல் தசைகளுக்கு நன்மை பயக்கும்.
பளு தூக்குதல்
பளு தூக்குவது உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் எலும்புகள் வலுவடையும்.
ஸ்குவாட் பயிற்சி
அரை காலில் அமர்ந்து எழும் ஸ்குவாட் உடற்பயிற்சி செய்வது உடலுக்கும் கால் பகுதிக்கும் மிகுந்த நன்மை பயக்கும். இது உடலை குறைக்கவும் உதவும்.
கார்டியோ
கார்டியோ உடற்பயிற்சி முழு உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் 20 நிமிடம் கார்டியோ பயிற்சி செய்யலாம்.
புஷ்-அப்
உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க புஷ்-அப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மார்பு தசைகளை பலப்படுத்துகிறது.