தினமும் ஸ்கிப்பிங் செய்வதில் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?

By Gowthami Subramani
24 Apr 2024, 12:15 IST

ஸ்கிப்பிங் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. தினமும் ஸ்கிப்பிங் செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதைக் காணலாம்

இதய ஆரோக்கியத்திற்கு

ஸ்கிப்பிங் செய்வது ஒரு சிறந்த கார்டியோ பயிற்சியாகும். இது இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது

உடல் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்க

ஸ்கிப்பிங் செய்யும் போது உடலில் உள்ள தசைகளுக்கு மிகுந்த பலத்தைத் தருகிறது. மேலும் உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது

உடல் சோர்வு நீங்க

தொடர்ந்து வேலை செய்வது உடல் சோர்வை ஏற்படுத்தலாம். இதற்கு ஸ்கிப்பிங் செய்வது சகிப்புத் தன்மையை அதிகரிக்கவும், சோர்வைப் போக்கவும் உதவுகிறது

எடை குறைய

ஸ்கிப்பிங் செய்வது உடல் எடையை இழப்பதற்கு சிறந்த தேர்வாகும். இது வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும், வயிற்றுத் தசைகளை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது

நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த

ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் சுவாசத்தை மேம்படுத்த உதவுகிறது. இது நுரையீரல் திறனை அதிகரிக்கக் காரணமாகிறது

எலும்புகளை வலுவாக்க

இந்த பயிற்சி செய்வது உடலில் எலும்புகளுக்கு வலிமையைத் தருகிறது. எலும்பின் அடர்த்தியை அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் வாய்ப்புகளைக் குறைக்க உதவுகிறது.

மன ஆரோக்கியத்திற்கு

மிதமான தீவிரத்தில் ஸ்கிப்பிங் செய்வது மனச்சோர்வைக் குறைக்க உதவுகிறது. இது உடல் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது