ஒரே வாரத்தில் தொங்கும் தொப்பைக்கு குட்-பை!

By Karthick M
29 Oct 2024, 23:42 IST

வயிற்றில் சேரும் பிடிவாதமான கொழுப்பை குறைக்க, சீரான உணவுடன் உடற்பயிற்சி செய்வது அவசியம். தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி என பார்க்கலாம்.

தினசரி உட்கொள்ளும் கலோரிகளை விட குறைவான கலோரிகளை உட்கொண்டு, அதனுடன் சமச்சீரான உணவையும் எடுத்துக் கொண்டால் உடல் எடையில் மாற்றத்தை காணலாம்.

தினசரி 40-45 நிமிடங்கள் அதிக தீவிரத்துடன் உடற்பயிற்சி செய்தால், 250-300 கலோரிகளை மட்டுமே எரிக்க முடியும். அதேபோல் 2 குலாப் ஜாமூன் சாப்பிட்டால், உங்கள் உழைப்பு அனைத்தும் வீண்.

எடை இழப்புக்கு எடை பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். ஏனெனில் இது உங்கள் தசைகளை அதிகரிக்கிறது. இந்த தசைகள் கொழுப்பைக் குறைக்கவும், கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவுகின்றன.

டெட்லிஃப்ட்ஸ் கூடுதல் கலோரிகளை விரைவாக எரிக்க உதவுகிறது. தொப்பையை குறைக்க விரும்புபவர்களின் பயிற்சிகளில் இதுவும் ஒன்று.