ரெட்ரோ வாக்கிங் என்றால் என்ன? பலன்கள் இதோ!

By Karthick M
23 Jan 2024, 23:56 IST

ரெட்ரோ வாக்கிங்

ரெட்ரோ வாக்கிங் என்பதை பின்னோக்கி நடைபயிற்சி என்று கூறலாம். இதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.

ரெட்ரோ வாக் என்றால் என்ன?

ரெட்ரோ வாக்கிங்கில் கால்களின் இயக்கம் முன்னோக்கி நகர்த்துவதற்கு பதிலாக பின்னோக்கி இருக்கும். இந்த மாதிரி நடக்க கால்கள் கடினமாக உழைக்க வேண்டும். இது கீழ் உடலின் தசைகளை பலப்படுத்துகிறது.

எடை இழப்பு

சாதாரண நடைப்பயிற்சியை விட ரெட்ரோ வாக்கிங் உடல் எடையை அதிகளவு குறைக்கும் என்றால் நம்ப முடிகிறதா. இது அதிகளவு கலோரிகளை எரிக்கிறது.

முதுகு வலி

முதுகு வலி பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை. ரெட்ரோ நடைபயிற்சி முதுகு வலிக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதய ஆரோக்கியம்

நடைபயிற்சி இதயத்திற்கு மிக நல்லது. ரெட்ரோ வாக்கிங் செய்தால் இதயம் இரத்தத்தை வேகமாக பம்ப் செய்கிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

வலிமையான கால்கள்

ரெட்ரோ வாக்கிங் செய்வதால் கால்களின் தசைகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு தசைகள் வலுவடையும். இது கால்களுக்கு அதிக பலம் தருகிறது.

மூட்டு வலி

ரெட்ரோ வாக்கிங் மூட்டு வலிக்கும் சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால் இதை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்.