அதிகப்படியான உடற்பயிற்சியால் ஏற்படும் பக்க விளைவுகள்!

By Karthick M
20 Apr 2024, 20:37 IST

உடற்பயிற்சி பக்க விளைவுகள்

ஆரோக்கியமாக வைத்து மக்கள் ஜிம்மிற்கு சென்று பல மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால் அதிகப்படியான உடற்பயிற்சியால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீங்குகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தசை வலி

அதிகப்படியான உடற்பயிற்சியின் காரணமாக உங்கள் தசைகள் வலிக்க ஆரம்பிக்கும். இதன்காரணமாக உங்கள் உடல் வலி மற்றும் பலவீனத்தை உணரலாம்.

மன அழுத்தம்

அதிகப்படியான உடற்பயிற்சியின் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். இது பதட்டத்தை ஏற்படுத்தும்.

தூக்கம் இன்மை

அதிகப்படியான உடற்பயிற்சியின் காரணமாக தூக்கத்தில் மாற்றம் ஏற்படும். இதன்காரணமாக நீங்கள் தூங்குவதில் சிரமத்தை சந்திக்கலாம்.

ஆற்றல் பற்றாக்குறை

அதிகப்படியான உடற்பயிற்சியால் உடலில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக உடலில் பலவீனம் மற்றும் சோர்வு ஏற்படத் தொடங்குகிறது.

இதய பாதிப்பு

அதிவேகமாக உடற்பயிற்சி செய்வது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான உடற்பயிற்சியால் உடல் அதிக ஆக்ஸிஜனை வழங்கத் தொடங்குகிறது. இது இதய நோய் பாதிப்பை ஏற்படுத்தும்.

எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்?

வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.