வொர்க்அவுட்டிற்கு பிறகு உடல் வலி வருகிறதா? இதை செய்யவும்!

By Karthick M
03 Jun 2024, 14:41 IST

உடல் வலி பிரச்சனையா?

உடற்பயிற்சிக்கு பிறகு பலர் உடல் வலியை அனுபவிக்கிறார்கள். இந்த பிரச்சனையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஓய்வு முக்கியம்

வொர்க் அவுட்டிற்கு பிறகு வலியிலிருந்து விடுபட ஓய்வு மிகவும் முக்கியம். உங்கள் உடற்பயிற்சிக்கு பிறகு சோர்வான தசைகளுக்கு சற்று ஓய்வு கொடுக்கவும்.

நீட்சி நன்மைகள்

உடற்பயிற்சிக்கு முன் மட்டுமின்றி பின்னரும் ஸ்ட்ரெச்சிங் செய்ய வேண்டும். இது உடலில் நெகிழ்வுத்தன்மையை பராமரித்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

கல் உப்பு மசாஜ்

கல் உப்பில் நல்ல அளவு மெக்னீசியம் சல்பேட் உள்ளது. இது தசைகளின் வீக்கம் மற்றும் வலியை அகற்ற உதவுகிறது. கல் உப்பை தண்ணீரில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவவும்.

எண்ணெய் வகைகள்

உடல் வலியை தவிர்க்க மிளகுக்கீரை மற்றும் லாவெண்டர் எண்ணெய்களை பயன்படுத்தலாம். நல்லெண்ணெயுடன் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து வலி உள்ள இடத்தில் தடவலாம்.

மஞ்சள் பயன்படுத்தலாம்

மஞ்சள் உடல் வலி பிரச்சனையை நீக்க பயனுள்ளதாக இருக்கும். மஞ்சளை வெதுவெதுப்பான நீரில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவலாம்.