மூட்டு வலிக்கான சரியான வாக்கிங் ஷூவை தேர்வு செய்வது எப்படி?

By Kanimozhi Pannerselvam
28 Sep 2024, 12:00 IST

மருத்துவர் ஆலோசனை

முழங்கால் வலியால் அவதிப்படுவோர் மருத்துவர் பரிந்துரைக்கக்கூடிய காலணிகளை அணிவது சிறந்தது. உங்கள் முழங்கால்களைப் பாதுகாக்க நடைபயிற்சி போது முடிந்தவரை அதிர்ச்சியை எதிர்க்கும் காலணிகளை அணிவது முக்கியம்.

நெகிழ்வுத்தன்மை

எந்த ஷூ வாங்கினால், அதன் ​​நெகிழ்வு தன்மை முக்கியமானது. ஷூ வாங்கச் செல்லும் போது ஷூவை எடுத்து, லேஸ்களை நோக்கி கால்விரல் பகுதியை வளைக்க முயற்சிக்கவும். அதிக சக்தி தேவையில்லாமல் எளிதாக நகர்ந்தால், இது பொருத்தமானது.

ஷூவின் அடிப்பகுதி அகலம்

முழங்கால் வலிக்கு வாக்கிங் ஷூ வாங்குவோர், அதன் அகலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஷூவின் குதிகால் பகுதி கால்விரல் பகுதியை விட அதிகமாக இருக்க வேண்டும். இது முழங்கால்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாது.

சப்போர்ட்

மூட்டு வலிக்காக வாக்கிங் செல்ல திட்டமிடுவோர் கால்களுக்கு நன்றாக சப்போர்ட் தரக்கூடிய, வசதியான ஷூக்களை வாங்க வேண்டும். இதற்காக ஷூ வாங்கும் முன்பு, அதனை அணிந்து கொண்டு ஒரு நிமிடம் நடந்து பாருங்கள்.

மெட்டீரியல்

காலணிகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களின் வகையையும் கவனிக்க வேண்டும். விலை உயர்ந்த காலணிகள் சிறப்பானதாக இருக்கும் எனக்கூற முடியாது. எனவே உயர்தர காலணிகள் உங்கள் கால்களுக்கு போதுமான மென்மை மற்றும் ஆதரவை வழங்கும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.