முதுகு வலி
நீண்ட நேரம் ஒரே நிலையில் வேலை பார்ப்பது, சரியான தூக்கம் இல்லாதது போன்ற தவறான வாழ்க்கை முறைகள் காரணமாக முதுகு வலி ஏற்படுகிறது. இது பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் பொதுவான பிரச்சனையாக மாறி வருகிறது
உடற்பயிற்சி
முதுகுவலியைப் போக்க சில உடற்பயிற்சிகள் உதவுகிறது. அதன் படி, நீச்சல் அடிப்பது முதுகுவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிப்பதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் இது முதுகெலும்பு மற்றும் மூட்டுகளில் அழுத்தத்தை குறைக்கும் குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சியாகும்
நீச்சல் பயிற்சி
நீச்சல் பயிற்சி மேற்கொள்வது முதுகெலும்பு தாங்க வேண்டிய எடையின் அளவைக் குறைக்கிறது. இது முதுகு வலியிலிருந்து சற்று நிவாரணம் தருகிறது
நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த
தினமும் நீச்சல் அடிப்பது முதுகு மற்றும் முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. இதன் மூலம் முதுகு வலியிலிருந்து விடுபடலாம்
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த
நீச்சல் பயிற்சி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது உடலில் ஆக்ஸிஜன் சிறப்பாக சென்றடைவதை ஊக்குவிப்பதுடன், முதுகு வலியைக் குறைக்கிறது
பின்னோக்கிய கைவீச்சு
முதுகுவலிக்கு பின்னோக்கிய கைவீச்சு ஒரு நல்ல தேர்வாகும். ஏனெனில் இதற்கு அதிக முதுகு வளைவு அல்லது சுழற்சி தேவையில்லை. இது உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, முதுகு தசைகளுக்கு வேலை செய்கிறது