உணவு சாப்பிட்ட உடனே நடப்பது உடலுக்கு நல்லதா?

By Karthick M
24 Dec 2024, 02:08 IST

உணவு உண்டவுடன் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

உணவை சாப்பிட்ட பிறகு, வசதியான நிலையில் உட்காருவதற்கு பதிலாக, நீங்கள் குறைந்தப்பட்சம் நிற்கலாம் அல்லது நடக்கலாம்.

நீரிழிவு நோயாளிகள், உணவு சாப்பிட்டு ஓய்வெடுப்பதற்குப் பதிலாக அல்லது படுத்துக் கொள்ளாமல், சிறிது நேரம் நடப்பது நல்லது.

இதயம் தொடர்பான பிரச்சனைகள், ஆஸ்துமா, உடல் பருமன் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களிலும் நடைபயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

சாப்பிட்ட உடன் நடப்பது உடல் செயல்பாடுகளை செயல்படுத்துகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்பை எளிதாக்குகிறது.