வொர்க் அவுட்டில் தசை இழப்பைத் தடுக்க என்ன செய்வது?

By Gowthami Subramani
05 Jul 2024, 09:00 IST

தசை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், தசைச் செயல்பாட்டைப் பராமரிப்பதற்கும் நிலையான எதிர்ப்புப் பயிற்சியில் ஈடுபட வேண்டும்

ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

தசைகளை ஆரோக்கியமாக வைக்க வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்

புரத உணவு உட்கொள்ளல்

தசை ஆரோக்கியத்திற்கு புரத உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தசை பழுது மற்றும் தசை வளர்ச்சிக்கு அதிலும் குறிப்பாக, உடற்பயிற்சிக்குப் பிறகு அத்தியாவசிய அமினோ அமிலங்களை வழங்குவதற்கு போதுமான புரதங்களை உட்கொள்ள வேண்டும்

கார்டியோ பயிற்சிகள்

ஒட்டுமொத்த உடற்பயிற்சி மற்றும் தசை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு கார்டியோ மற்றும் நெகிழ்வுத்தன்மை பயிற்சிகளைச் சேர்க்கலாம்

தசை மீளுருவாக்கத்திற்கு

அதிகப்படியான பயன்பாடு மற்றும் காயத்தைத் தடுப்பதற்கு, உடற்பயிற்சிகளுக்குப் பிறகு தசைகளை மீட்டெடுக்கவும், மீளுருவாக்கம் செய்யவும் போதுமான நேரத்தை அனுமதிக்க வேண்டும்

சுகாதார நிபுணர்

குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், தசை ஆரோக்கியத்தை நிர்வகிப்பதற்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை போன்ற விருப்பங்கள் குறித்து சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கலாம்