தொடை கொழுப்பு உடனே காணாமல் போக இதை செய்யுங்கள்!

By Karthick M
21 Mar 2024, 01:10 IST

தொடை கொழுப்பு குறைய வழிகள்

உடல் பருமனின் தாக்கம் தொடைகளில் அதிகம் தெரியும். உங்கள் தொடை கொழுப்பை குறைக்க விரும்பினால் உங்கள் உணவிலும், வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதுகுறித்து பார்க்கலாம்.

தொடை கொழுப்பை கரைப்பது கடினம்

வயிற்றை ஒப்பிடும்போது தொடைகளில் சேரும் கூடுதல் கொழுப்பை கரைப்பது கடினம். இதற்கு உடல் உழைப்புடன் உணவுத் திட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம்

தொடையின் கொழுப்பை குறைக்க வேண்டுமானால், மீண்டும் மீண்டும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம். இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

சைக்கிள் ஓட்டுதல்

தொடைகள் உட்பட ஒட்டுமொத்த உடல் கொழுப்பைக் குறைக்க விரும்பினால் நீங்கள் சைக்கிள் ஓட்டலாம். சைக்கிள் ஓட்டுவது மூலம் உடலின் கூடுதல் கொழுப்பை குறைக்கலாம்.

ஸ்குவாட்

பள்ளியில் சிட்-அப் செய்வது தண்டனை போல் தோன்றினாலும் இது நிஜமாக தொடைக்கு மிக நல்லது. இது தொடை கொழுப்பை குறைக்க சிறந்த வழி.

கலோரி மற்றும் புரதம்

தொடையில் மட்டுமல்ல உங்கள் உடலின் மொத்த கூடுதல் கொழுப்பையும் குறைக்க உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். அதேபோல் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.