நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, மோசமான தோரணை அல்லது மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம். எனினும் சில எளிதான உடற்பயிற்சியின் மூலம் கழுத்து வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்
தலையை சுழற்றுவது
தலையை மெதுவாக வலது பக்கம் திருப்பி 5 விநாடிகள் வைத்திருக்க வேண்டும். பிறகு இடது புறம் திருப்ப வேண்டும். இந்த உடற்பயிற்சி செய்வது நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், விறைப்பைக் குறைக்கவும் உதவுகிறது
தோள்பட்டையை சுழற்றுவது
கழுத்து மற்றும் மேல் முதுகில் உள்ள பதற்றத்தை நீக்குவதற்கு, தோள்களை பின்னோக்கு மற்றும் முன்னோக்கி வட்ட இயக்கங்களில் சுழற்ற வேண்டும்
கழுத்தை சாய்த்தல்
கன்னம் உங்கள் மார்பைத் தொடும் வரை மெதுவாக முன்னோக்கி சாய்ந்து, பிறகு மேல்நோக்கி பார்க்குமாறு சாய்க்க வேண்டும். இதை 8-10 முறை செய்யலாம். இது கழுத்து தசைகளை நீட்டவும், ஓய்வெடுக்கவும் உதவுகிறது
கன்னத்தை பின்னால் இழுப்பது
உட்கார்ந்து அல்லது நிற்கும் போது இரட்டை கன்னத்தை உருவாக்க கன்னத்தை மெதுவாக பின்னால் இழுக்க வேண்டும். இதில் 5 விநாடிகள் வைத்திருக்கலாம். இந்த உடற்பயிற்சி செய்வது தோரணையை மேம்படுத்தவும், அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது
பூனை-மாடு போஸ்
இந்த உடற்பயிற்சியானது முதுகில் பூனை போல் குறுக்கி, பிறகு மாடுபோல் நீட்டுவதைக் குறிக்கிறது. இதில் தலையை உயர்த்துவது மற்றும் கீழே தொங்க விடுவது கழுத்து வலியை நீக்க உதவுகிறது