ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

By Karthick M
21 Mar 2024, 01:37 IST

உடற்பயிற்சி சிறந்த நேரம்

உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்கள் பலரும் ஆரம்பத்தில் அதிகமாக செய்துவிட்டு காலப்போக்கில் குறைத்துவிடுகிறார்கள். சரி, தினசரி எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

உடற்பயிற்சி செய்வது ஏன் அவசியம்?

ஒரு நபர் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். இதன்மூலம் பல பிரச்சனைகளில் இருந்து உடலை தற்காத்துக் கொள்ள முடியும்.

எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்?

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, வாரத்தில் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக நேர உடற்பயிற்சியால் வரும் தீமைகள்

உடற்பயிற்சி செய்வது உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது. ஆனால் அதிகப்படியான உடற்பயிற்சி செய்வது ஆற்றல் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். இதனால் நாள் முழுவதும் சோர்வான உணர்வு வரலாம்.

தசை வலி பிரச்சனை

நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்தால் தசை வலியால் பாதிக்கப்படலாம். இதனால் உடல் வலி, பலவீனமான எலும்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை

அதிகமாக உடற்பயிற்சி செய்தால் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல் தூக்கமின்மை வரலாம். எனவே அளவாக தினசரி உடற்பயிற்சி செய்வதே நல்லது.