உணவு சாப்பிட்ட பின் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?

By Karthick M
02 Aug 2024, 13:24 IST

உணவு உண்ட பின் நடைபயிற்சி

உணவு உண்ட பின் நடப்பது உடல் நலத்திற்கு நல்லது. ஆனால் உணவு உண்ட பிறகு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

எவ்வளவு நேரம் நடக்கலாம்?

உணவு உண்ட பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க வேண்டும் அல்லது 1500 ஸ்டெப்கள் நடக்கலாம். இதனால் உடல் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் மாறும்.

எடை குறைக்க உதவும்

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்வது நல்லது. நடைபயிற்சி உடலில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்கிறது.

வளர்சிதை மாற்றம்

சாப்பிட்ட பிறகு வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது. இதனால் உணவில் எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கல் போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாது.

தூக்கம் மற்றும் இரத்த ஓட்டம்

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் இது மிக உதவியாக இருக்கும். எனவே நடைபயிற்சி என்பது ஒருவருக்கு மிக முக்கியமான ஒன்று.