அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வதன் நன்மைகளைக் காணலாம்
எடை மேலாண்மை மற்றும் நீரிழிவு தடுப்பு
அதிகாலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொள்வது உடலில் கலோரிகளை எரிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும் உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
நடைபயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இருதய உடற்பயிற்சியில் இது சிறந்த தேர்வாகும்
அறிவாற்றல் மேம்பாட்டிற்கு
அதிகாலை நடைபயிற்சி செய்வது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது
வைட்டமின் டி
அதிகாலையில் நடைபயிற்சியின் போது சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படுகிறது. இது வைட்டமின் டி குறைபாட்டைத் தவிர்க்க உதவுகிறது
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
வழக்கமான உடற்பயிற்சி உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது. மேலும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது
மேம்பட்ட மனநிலை
உடற்பயிற்சி செய்யும் போது உடலில் என்டோர்பின்களை வெளியிடுகிறது. இது மனநிலையை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளது
ஆற்றல் ஊக்கியாக
காலையில் நடைபயிற்சி செய்வது சூரிய ஒளி வெளிப்பாட்டை அதிகரிக்கிறது. இது சர்க்காடியன் தாளத்தை சீராக்கவும், உடலில் இயற்கையாகவே ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது
சிறந்த தூக்கத்தைப் பெற
வழக்கமான உடல் செயல்பாடு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. எனினும் தூங்கும் நேரத்திற்கு மிக அருகில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தூண்டுதல் விளைவை ஏற்படுத்தலாம்