தினமும் வெறும் 15 நிமிஷம் சைக்கிள் ஓட்டுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
04 Jun 2024, 13:30 IST

ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் தினமும் 15 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துகிறது

எடை மேலாண்மைக்கு

சைக்கிள் ஓட்டுவது உடலில் கலோரிகளை எரிக்கவும் அதிக எடையை குறைக்கவும் உதவும் ஒரு சிறந்த வழியாகும். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது. இதை சீரான உணவுடன் இணைத்தால் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கலாம்.

தசை வலிமை அதிகரிக்க

சைக்கிள் ஓட்டுதல் உடலின் பல்வேறு தசைக் குழுக்களை ஈடுபடுத்துகிறது. குறிப்பாக, கால்கள், தொடை எலும்புகள், குவாட்ரைசெப்ஸ் உள்ளிட்ட முக்கிய தசைகளை உள்ளடக்கியதாகும்

இதய ஆரோக்கியத்திற்கு

சைக்கிள் ஓட்டுவது ஒரு சக்திவாய்ந்த கார்டியோ உடற்பயிற்சி ஆகும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

சைக்கிள் ஓட்டுதல் போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இது நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது

மூட்டுகளைப் பலப்படுத்த

சைக்கிள் ஓட்டுவது மூட்டுகளைப் பலப்படுத்த உதவுகிறது. இதன் மென்மையான இயக்கம் மூட்டு நெகிழ்வுத்தன்மையை பராமரிக்கக உதவுகிறது

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு

சைக்கிள் ஓட்டுதல் நுரையீரல் திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்கிறது. இது ஆழ்ந்த சுவாசத்தை ஊக்குவிக்கிறது. மேலும், ஆக்ஸிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கிறது

ஆரோக்கியமான தூக்கத்திற்கு

சைக்கிள் ஓட்டுதலில் ஈடுபடுவது ஆரோக்கியமான தூக்க முறைகளை ஒழுங்குபடுத்தவும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது இரவில் அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கிறது