நிமிடத்திற்கு 100 படிகள் நடப்பதை விறுவிறுப்பான நடையாகக் கருதலாம். வேகமான வேகத்தில் நகர்வது, சாதாரண நடைப்பயிற்சியின் நன்மைகளை கணிசமாக அதிகரிக்கிறது. இதில் விறுவிறுப்பான நடைபயிற்சியால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
உடல் எடை குறைவு
தினமும் விறுவிறுப்பான நடைப்பயணத்தை மேற்கொள்வது உடலில் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது எடை மேலாண்மை மற்றும் எடை இழப்புக்கு சிறந்த தேர்வாக அமைகிறது
இதய ஆரோக்கியம்
விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வது இதயத்தை பலப்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் பக்கவாதம் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்
தசை மற்றும் எலும்பு வலுவாக
இந்த வகையான உடற்பயிற்சியின் உதவியுடன் தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தலாம். இதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கலாம். இது ஒட்டுமொத்த வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது
சிறந்த தூக்கத்திற்கு
விறுவிறுப்பான நடைபயிற்சி போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகள், சீரான தூக்கத்தை ஒழுங்குபடுத்தவும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
மன ஆரோக்கியத்திற்கு
விறுவிறுப்பான நடைபயிற்சியுடன் உடல் செயல்பாடு, பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றின் அறிகுறிகளைக் குறைக்கும் எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது
அறிவாற்றல் மேம்பாட்டிற்கு
விறுவிறுப்பான நடைப்பயிற்சி அறிவாற்றல் திறன் மற்றும் மூளையின் செயல்பாடை மேம்படுத்துகிறது. இதன் மூலம் டிமென்ஷியா மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி அபாயத்தைக் குறைக்கலாம்
நோயெதிர்ப்பு அமைப்பு
இந்த விறுவிறுப்பான நடைப்பயிற்சியில் ஈடுபடுவது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை திறம்பட எதிர்த்துப் போராட முடியும்