எடை குறைய இந்த 5 சிம்பிள் எக்சர்சைஸ்ல இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க

By Gowthami Subramani
28 Feb 2025, 20:11 IST

தொப்பைக் கொழுப்பைக் குறைக்க விரும்புபவர்கள் ஆரம்ப உடற்பயிற்சியாக சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இந்த வகை உடற்பயிற்சிகள் உடல் கொழுப்பைக் குறைக்கவும், சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும், உடல் தகுதியை அதிகரிக்கவும் உதவுகிறது

ஸ்குவாட்ஸ்

ஸ்குவாட்ஸ் செய்வது கால்களை வலுப்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. மேலும் கால்களை இடுப்பு அகலத்தில் வைத்து, ஸ்குவாட்ஸ் செய்து பிறகு மீண்டும் மேலே தள்ளலாம்

ஜம்பிங்

ஜம்பிங் செய்வது இதயத் துடிப்பை அதிகரித்து கலோரிகளை விரைவாக எரிக்கிறது. இது நேராக நின்று, கைகள் மற்றும் கால்களை விரித்து குதிக்க வேண்டும். பின்னர் தொடக்கத்திற்குத் திரும்பலாம்

Lunges

லுஞ்சஸ் பயிற்சி செய்வது தொடைகள், பிட்டம் மற்றும் மையப் பகுதியை வேலை செய்ய வைக்கிறது. முன்னோக்கிச் செல்ல வேண்டு, இரண்டு முழங்கால்களையும் 90° இல் வளைத்து, பிறகு மீண்டும் மேலே தள்ளி, கால்களை மாற்ற வேண்டும்

புஷ்-அப்கள்

இது கைகள், மார்பு, தோள்களுக்கு வேலை செய்கிறது. உடலைத் தரையை நோக்கித் தாழ்த்தி, பிறகு மீண்டும் மேலே தள்ள வேண்டும். தேவைப்பட்டால் முழங்கால்களைப் பயன்படுத்தி மாற்றலாம்

பிளாங்க்

வலுவான கோர் எடையிழப்பு மற்றும் தோரணைக்கு உதவுகிறது. முழங்கைகள், கால் விரல்களில் நேரான உடல்நிலையை 30-60 விநாடிகள் வைத்திருக்க வேண்டும்