பலர் பல்வேறு காரணத்தால் முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற முதுகு பகுதியை ஸ்ட்ரெச் செய்யக்கூடிய பயிற்சிகள் உதவும். இது அசௌகரியத்தை குறைப்பதோடு, இடுப்பை உறுதியாக்கும்.
அதேபோல் ஸ்ட்ரெச் பயிற்சிகள் சிறந்த இரத்த ஓட்டத்துடன் உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் நன்மைகளை தருகிறது.
பவன முக்தாசனம்
இந்த ஆசனம் கீழ் முதுகு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
சைல்ட் போஸ்
குழந்தையை போஸ் மென்மையான மற்றும் சிறந்த கீழ் முதுகு ஸ்ட்ரெச்களில் ஒன்றாகும். வயது வித்தியாசமின்றி எளிதாக செய்யக்கூடிய ஆசனம்.
பச்சிமோத்தனாசனம், பாதஹஸ்தாசனம்
இந்த இரண்டு ஆசனங்களும் முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெற பெரும் உதவியாக இருக்கும்.