குளிர்காலத்தில் காலையில் எழுந்தவுடன் நடைபயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகளைத் தருகிறது. இதன் மூலம் பல வகையான நோய்கள் குணமாகலாம்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த
குளிர்காலத்தில் நடைபயிற்சி செய்வது இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பயனுள்ளதாக அமையும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதுடன், இதயம் சார்ந்த பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது
மூட்டுவலி நிவாரணத்திற்கு
குளிர்காலநிலையில் மூட்டு வலி ஏற்படுவது பொதுவானதாகும். எனினும், இதைத் தவிர்க்க தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியமாகும்
நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த
குளிர்காலத்தில் மக்கள் அடிக்கடி சளி மற்றும் காய்ச்சலால் அவதியுறுகின்றனர். இந்த நேரத்தில் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த நடைபயிற்சி மேற்கொள்ளலாம்
வைட்டமின் டி அதிகரிக்க
குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால் குளிர்காலத்தில் சூரிய ஒளியில் இருப்பது உடலில் வைட்டமின் டி அளவை அதிகரித்து எலும்புகளை வலுப்படுத்துகிறது
மன ஆரோக்கியத்திற்கு
குளிர்காலத்தில் தினமும் நடைபயிற்சி செய்வதன் மூலம் மனநல நன்மைகளைப் பெறலாம். இது தவிர, நோயெதிர்ப்புச் சக்தி வலுவடைவதுடன், கலோரிகளை எரிக்கத் தொடங்குகிறது
நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த
குளிர்ந்த காலநிலையில் நடைபயிற்சி மேற்கொள்வது நுரையீரல் திறனை அதிகரிக்கிறது. மேலும் இது ஆக்ஸிஜனை அதிகரித்து, நுரையீரலை நன்றாகச் செயல்பட வைக்கிறது
உடல் எடை இழப்புக்கு
காலையில் நடைபயிற்சி செய்வது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. இதற்கு நடக்கும் போது கலோரிகள் எரிக்கப்படுவதே காரணமாகும்
சிறந்த தூக்கத்திற்கு
குளிர்காலத்தில் நடைபயிற்சி செய்வதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம். நடைபயிற்சி செய்யும் போது செரோடோனின் ஹார்மோன் வெளியிடப்பட்டு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது