அதிகப்படியான மாசுபாடு மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்களால் ஆஸ்துமா பிரச்சனை ஏற்படுகிறது. ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த உதவும் சுவாசப் பிரச்சனையை பார்க்கலாம்.
சுவாசப் பயிற்சி
தினமும் சுவாசப் பயிற்சி செய்வது உடலுக்கு பல நன்மைகள் பயக்கும். மூக்கை ஒரு பக்கம் பிடித்து ஒரு துவாரம் வழியாக சுவாசத்தை இழுத்து மறு துவாரம் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
வயிற்று சுவாசம்
வயிற்று சுவாசப் பயிற்சி நுரையீரலுக்கு மிக நன்மை பயக்கும். இது ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதோடு நுரையீரலுக்கும் நன்மை பயக்கும். நேரே அமர்ந்து வயிற்றை உள்ளே இழுத்து வெளிவிடும் அளவு மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்.
உத்கீத பிராணாயாமம்
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த உத்கீத பிராணயாமா பயிற்சி செய்யலாம். இது உடலுக்கு சுறுசுறுப்பை வழங்கும்.
ஆழ்ந்த சுவாசம்
ஆழ்ந்த சுவாசம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த உதவும். இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
பிரமாரி யோகாசனம்
பிரமாரி யோகாசனம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை தொடர்ந்து செய்தால் மன அழுத்தம் நீங்கும்.
முழுமையாக படித்ததற்கு நன்றிகள்
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த இந்த சுவாசப் பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும். ஆஸ்துமா தீவிர நிலையில் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.