நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த காலை நடைபயிற்சி பெரிதும் உதவுகிறது. இதில் நீரிழிவு நோயாளிகள் காலை நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் மற்ற சில நன்மைகளைக் காணலாம்
காலை நடைப்பயிற்சி
காலை நடைப்பயிற்சி சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கான வழியாகும். இது நீரிழிவு நோயைக்
இன்சுலின் உணர்திறன் மேம்பாடு
நடைபயிற்சி இன்சுலினை சிறப்பாக பயன்படுத்த வழிவகுக்கிறது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதை எளிதாக்குவதுடன், நீரிழிவு மேலாண்மையை மேம்படுத்துகிறது
ஆரோக்கியமான உணவுப்பழகம்
காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கத்தில் இணைப்பது ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள வழிவகுக்கிறது. இது நீரிழிவு மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்
கலோரிகளை எரிக்க
நடைபயிற்சி என்பது கலோரிகளை எரிக்கவும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது. இது நீரிழிவு நோய்க்குக் காரணமான உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கிறது
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த
காலை நடைபயிற்சி மேற்கொள்வது வலிமையை அதிகரித்து, அதிகப்படியான கலோரிகளை எரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது இதய நலன்களை மேம்படுத்தும்
மன அழுத்தத்தைக் குறைக்க
காலையில் நடைபயிற்சி செய்வது மனதை தெளிவுபடுத்துகிறது. மேலும், இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது தவிர, கவலை மற்றும் மனச்சோர்வை எளிதாக்கி இரத்த சர்க்கரை அளவை சாதகமாக பாதிக்கிறது