சுகர் இருந்தாலும் இந்த ஸ்வீட் சாப்பிடலாம்.. ஒன்னுமே ஆகாது.!

By Ishvarya Gurumurthy G
30 Oct 2024, 21:49 IST

சுகர் இருந்தாலும் சில ஸ்வீட் சாப்பிட்டால் ஒன்னும் ஆகாது.! அது என்ன ஸ்வீட்னு யோசிக்கிறீர்களா.? இதை பற்றி அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.

நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி இனிப்புகளை சாப்பிட விரும்புவார்கள். ஆனால், அவர்களால் இனிப்பு சாப்பிட முடியாது. சர்க்கரை அளவைப் பராமரிக்கும் போது சில இனிப்புகளை சாப்பிடலாம். அவை என்னவென்று இங்கே காண்போம்.

அல்வா

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்களுக்கும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், நீங்கள் அல்வா சாப்பிடலாம். பாதாம் அல்லது கேரட் அல்வா சாப்பிடுங்கள். அதில் சர்க்கரை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

டார்க் சாக்லேட்

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடும் போது டார்க் சாக்லேட் சாப்பிடலாம். இவற்றில் அதிக அளவு சர்க்கரை இல்லை.

தேன் மற்றும் வெல்லம்

தேன் மற்றும் வெல்லம் சேர்த்து ஸ்மூதிஸ் மற்றும் ஹல்வா சாப்பிடலாம். அவற்றை நேரடியாக சாப்பிடுவதை தவிர்க்கவும். ஆனால், கண்டிப்பாக சர்க்கரையை சரிபார்க்கவும்.

சுரைக்காய் பர்ஃபி

சுரைக்காய் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரையை அதிகரிக்க அனுமதிக்காது. சுரைக்காய் பர்ஃபியை குறைந்த அளவில் சாப்பிடலாம்.

ஸ்மூத்தி

இனிப்பு தேர்வுக்கு பழங்களால் செய்யப்பட்ட ஸ்மூத்திகளை உட்கொள்ளலாம். அதில் சர்க்கரையை தனியாக சேர்க்க வேண்டாம். பழங்களில் இயற்கை சர்க்கரை உள்ளது.

நீங்கள் இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், குறைந்த அளவில் இவற்றை உட்கொள்ளலாம். உடல்நலம் தொடர்பான தகவல்களுக்கு onlymyhealth.comஐப் படிக்கவும்.