இரத்த சர்க்கரையைக் குறைக்கும் சூப்பர் மசாலாக்கள் இதோ

By Gowthami Subramani
29 Jul 2024, 17:30 IST

நீரிழிவு நோய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதை ஏராளமான மூலிகைகள், மசாலா பொருட்களைக் கொண்டு கட்டுப்படுத்தலாம். இதில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மசாலாக்களைக் காணலாம்

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. இவை நீரிழிவு நோய் சம்பந்தமான சிக்கல்களைத் தடுக்கவும், இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஆக்சிடேட்டிவ் அழுத்தம் என்பது பெரும்பாலான நாள்பட்ட நோய்களை உண்டாக்கக் கூடியது. இலவங்கப்பட்டை உட்கொள்ளலின் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்

வெந்தயம்

இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை செரிமானத்தை மெதுவாக்கி கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை மெதுவாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இவை இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது

பாசில் மரம்

நீரிழிவு நோயின் சிகிச்சையில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் சிறந்த மூலிகை சப்ளிமென்ட் பாசில் மரம் ஆகும். இது உடலில் இன்சுலின் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவை திறம்பட குறைக்கவும் உதவுகிறது

கிராம்பு

கிராம்புவில் ஆன்டிசெப்டிக் பண்புகள், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் செரிமான ஆரோக்கியத்தைத் தருகிறது. இவை இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கிறது

பன்னீர் பூக்கள்

பன்னீர் பூக்கள் பீட்டா செல்களை ஆற்றுவதன் மூலம் இன்சுலினை சிறந்த முறையில் பயன்படுத்த கணையத்திற்கு உதவுகிறது. இதை தினமும் சிறிய அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்