நீரிழிவு நோயால், இதயம், இரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் கண்கள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இலைகள் பற்றி பார்க்கலாம்.
வேப்ப இலை
தினமும் காலையில் சில வேப்ப இலைகளை மென்று சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
சீதா பழ இலை
சீத்தா பழ இலைகள் மிகவும் கசப்பாக இருந்தாலும், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும். தினமும் காலையில் 1-2 இலைகளை மென்று சாப்பிடலாம்.
கொய்யா இலை
கொய்யா இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதன் இலைகளை உட்கொள்வது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
எப்படி சாப்பிடுவது?
கொய்யா இலைகளை மென்று சாப்பிடுவது மட்டுமின்றி, கஷாயம், தேநீர் போன்றவற்றை செய்தும் உட்கொள்ளலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதை உணவிலும் பயன்படுத்தலாம்.
துளசி இலைகள்
துளசி இலைகளில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கும் பல பண்புகள் உள்ளன. நீங்கள் அதை தண்ணீருடன் எடுத்துக் கொள்ளலாம் அல்லது கஷாயமாகவும் குடிக்கலாம்.
இன்சுலின் இலை
தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின் படி, இன்சுலின் இலை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளவை. இதில் உள்ள பண்புகள் சர்க்கரை அளவை உடனே கட்டுப்படுத்தும்.