நீரிழிவு நோயாளிகள் தாராளமா இந்த நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்

By Gowthami Subramani
05 Nov 2024, 18:00 IST

பல்வேறு நட்ஸ் வகைகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் போன்றவை இருப்பதால், அவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது. நட்ஸ் ஆனது நீரிழிவு நோயினால் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது

பாதாம்

இதில் வைட்டமின் ஈ மற்றும் பி12, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுகிறது. ஓட்மீல் அல்லது உலர் தானியத்தில் பாதாம் சேர்க்கலாம் அல்லது டோஸ்ட்டில் பாதாம் வெண்ணெய் தடவி உட்கொள்ளலாம்

வேர்க்கடலை

இது குறைந்த கிளைசெமிக் குறியீடு, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

வால்நட்ஸ்

இதில் ஆல்பா-லினோலெனிக் அமிலம், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது. இது நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதற்கு சாலட்களில் நறுக்கப்பட்ட வால்நட்ஸ்களை சேர்க்கலாம்

மக்காடமியா நட்ஸ்

இந்த நட்ஸ் ஆனது தியாமின், மெக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் குறைந்த சர்க்கரை உள்ளது

பெக்கன்கள்

இதில் பாலிபினால்கள், மாங்கனீசு மற்றும் வைட்டமின் ஈ போன்றவை உள்ளது. இது குறைந்த கிளைசெமிக் கிற்யீட்டைக் கொண்டுள்ளது. இவை நீரிழிவு நோய்க்கு சிறந்த தேர்வாகும்

குறிப்பு

இது போன்ற நட்ஸ் வகைகள் நீரிழிவு நோய்க்கு மிகுந்த நன்மை பயக்கும். எனினும், மருத்துவரின் பரிந்துரையில் போதுமான அளவு உட்கொள்வது நல்லது