ஒவ்வொருவருக்கும் காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் பெரிதும் கவனத்தில் கொள்ள வேண்டிய உணவு நேரம் காலை நேரம் ஆகும். சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஆரோக்கியமான காலை உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
கோதுமை தோசை
தானிய வகையான கோதுமையில் குறைந்தளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் நிறைந்துள்ளன. எனவே, இவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக அமைகிறது. குறிப்பாக கோதுமையில் தயாரிக்கப்படும் தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது சிறந்த பலன்களைத் தரும். இந்த தோசைக்கு சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து தயாரித்து அருந்தலாம்.
சுண்டல்
கொண்டைகடலை சுண்டல் சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புத உணவுப் பொருளாகும். இதில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளன. எனவே, சர்க்கரை நோயாளிகள் எந்த தயக்கமுமின்றி இதை சாப்பிடலாம்.
ராகி உத்தபம்
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கு சிறந்தது. மேலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. உங்கள் நாளைத் தொடங்க இது ஒரு ஆரோக்கியமான காலை உணவு.
முட்டை
சர்க்கரை நோயாளிகள் காலை உணவில் முட்டையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டை புரதத்தின் நல்ல மூலமாகும் மற்றும் பல வழிகளில் உணவில் சேர்க்கப்படலாம். முட்டையில் புரதம் நிறைந்துள்ளது.
இவை அனைத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு காலை உணவுக்கு ஒரு சிறந்த வழி. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.