சர்க்கரை நோயாளிகள் பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். சர்க்கரை நோயாளிகள் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.
ஆப்பிள்கள்
ஆப்பிளில் நிறைந்துள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் சர்க்கரையின் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை மெதுவாக்கி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஆப்பிளில் உள்ள குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் குறியீடு இரத்த சர்க்கரை அளவுகளில் குறைந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பெர்ரி
பெர்ரி பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, அவுரிநெல்லி போன்றவை அடங்கும். இது சுவையானது மட்டுமல்லாமல், குறைந்தளவு சர்க்கரையைக் கொண்டுள்ளது.
ஆரஞ்சு
நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பழமாக ஆரஞ்சு உள்ளது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளது.
மாதுளை
மாதுளையில் குறைந்த அளவிலான கிளைசெமிக் இன்டெக்ஸ் நிறைந்துள்ளது. சர்க்கரை குறைவாக இருப்பதுடன், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் நல்ல வளமான மூலமாகும்.