ஆரோக்கியமாக இருக்க சர்க்கரை நோயாளிகள் எந்த பழங்கள் சாப்பிடலாம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதற்கான பதிலை பார்க்கலாம்.
ஆப்பிள்
பிற பழங்களுடன் ஒப்பிடுகையில் ஆப்பிளில் குறைந்த அளவு சர்க்கரையே உள்ளது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
பெர்ரி
பெர்ரி பழங்கள் சுவையானது என்றாலும் குறைந்தளவு சர்க்கரையேக் கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றம், வைட்டமின்கள் அதிகம்.
ஆரஞ்சு
நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பழமாக ஆரஞ்சு உள்ளது. இதில் வைட்டமின் சி சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளது.
மாதுளை
சர்க்கரை குறைவாக இருப்பதுடன், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் நல்ல வளமான மூலமாகும். இவை இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவுகிறது.
பேரிக்காய்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த பழமாகும். இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
தாராளமாக சாப்பிடலாம்
இந்த அனைத்து பழங்களும் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த பழ வகைகள் ஆகும். சர்க்கரை அளவை முறையான மருத்துவ பரிசோதனை மூலம் குறைப்பது சிறப்பு.