நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த டயட் முறைகள்

By Gowthami Subramani
28 Jun 2024, 09:00 IST

நீரிழிவு நோயை நிர்வகிக்க சீரான இடைவெளியுடன் கூடிய டயட் முறையைப் பின்பற்றுவது அவசியமாகும். இதில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் நீரிழிவு நோய்க்கான டயட் முறைகளைக் காணலாம்

குறைந்த கார்போஹைட்ரேட் உணவு

ரொட்டி, பாஸ்தா மற்றும் சர்க்கரை தின்பண்டங்கள் போன்ற அதிக கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம்  நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். குறைந்த கார்போஹைட்ரேட் உணவு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது

மெடிட்டேரியன் டயட்

இந்த டயட் முறை அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இவை இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது

பிளான்ட் அடிப்படையிலான டயட்

தாவர அடிப்படையிலான உணவு அதாவது உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் போன்றவை இரத்த சர்க்கரை அளவை ஆதரிக்கிறது. மேலும் இதன் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது

குறைந்த GI உணவு

கிளைசெமிக் இண்டெக்ஸ் (GI) குறைந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய் போன்ற அபாயத்தைக் குறைக்கிறது

DASH உணவுமுறை

DASH என்பது உயர் இரத்த அழுத்தத்தை நிறுத்துவதற்கான உணவு முறையாகும். நீரிழிவு இல்லாதவர்களை விட நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருக்கும். எனவே DASH டயட் பின்பற்றுவது நீரிழிவு நோய்க்கு உதவுகிறது

பேலியோ டயட்

பேலியோ டயட் ஆனது பேலியோலிதிக் டயட் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் வாழைப்பழங்கள், பெர்ரி, மற்றும் அவகேடோ போன்ற பழ வகைகள், ப்ரோக்கோலி, கேரட், தக்காளி போன்ற வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் போன்றவை அடங்கும்