உங்களுக்கு சுகர் இருக்கா? இத கட்டுப்படுத்த வழி தேடுகிறீர்களா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க. சுகர் ஏறவே ஏறாது.
முழு தானியங்கள்
இதில் அதிக அளவு நார்ச்சத்தும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இது உங்கள் சர்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
கொழுப்பு நிறைந்த மீன்கள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீனக்ளை உங்கள் உணவில் இணைத்துக்கொள்ளுங்கள். இது நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவை இது கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
பீன்ஸ்
புரதங்களின் சிறந்த மூலமாக பீன்ஸ் திகழ்கிறது. இதில் கிளைசெமிக் குறியீடு குறைவு. இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் வகை பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இருக்கிறது. பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
பெர்ரி பழங்கள்
நீரிழிவு மற்றும் புற்றுநோயை தடுக்க பெர்ரி பழங்கள் சிறந்த தேர்வாக திகழ்கின்றன. இது ஆன்டி ஆக்ஸிடன்களின் சிறந்த மூலமாக இருக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
சர்க்கரை வள்ளி கிழங்கு
இதில் கிளைசெமிக் குறியீடு குறைவு. மேலும் இதில் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. இது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.