சுகர் லெவலை டக்குனு குறைக்கும் மூலிகைகள் இதோ

By Gowthami Subramani
27 Jan 2025, 08:11 IST

நீரிழிவு நோயை நிர்வகிக்க வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அதன் படி, அன்றாட வழக்கத்தில் சில குறிப்பிட்ட மூலிகைகளைச் சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

இஞ்சி

இது அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக நன்கு பெயர் பெற்றதாகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் இன்சுலின் உணர்திறனுக்கு வழிவகுக்கிறது

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் உள்ள ஆரோக்கியமான பண்புகள் மேம்பட்ட இன்சுலின் உணர்திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது செல்கள் குளுக்கோஸை உறிஞ்சி இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற கலவையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. இவை சிறந்த இன்சுலின் உணர்திறனுக்கு பங்களிக்கக் கூடியதாகும். இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

ஜின்செங்

இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் ஆயுர்வேத மூலிகையாகும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும்

வெந்தயம்

இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக இதில் உள்ள சேர்மங்கள் இன்சுலின் வெளியீட்டைத் தூண்டி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது