சுகர் இருக்கா.? இந்த பழங்கள் ஆபத்து..

By Ishvarya Gurumurthy G
15 Oct 2024, 08:34 IST

பழங்கள் நல்லது தான். ஆனால் சில பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள் இங்கே.

தர்பூசணி

மக்கள் விரும்பி அதிகமாக சாப்பிடும் பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இதில், அதிக அளவு நீர் சத்து உள்ளது. இதனுடன், தர்பூசணியில் இயற்கையான சர்க்கரையும் உள்ளது. எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

மாம்பழம்

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், மாம்பழத்தை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்கவும். மாம்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் எல்லா சீசன்களிலும் கிடைக்க கூடிய பழம். இது ஆரோக்கியத்துக்கு சஞ்சீவினி என்றே கூறலாம். வாழைப்பழத்திலும் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது.

அன்னாசி

அன்னாசி ஒரு இனிப்பு மற்றும் புளிப்பு பழம். கார்போஹைட்ரேட்டுகளும் இதில் காணப்படுகின்றன. 100 கிராம் அன்னாசிப்பழத்தில் சுமார் 13.1 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், அன்னாசிப்பழத்தை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.