சுகரைக் கட்டுக்குள் வைக்க வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடுங்க

By Gowthami Subramani
17 Jun 2025, 21:42 IST

சர்க்கரை அளவு தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருப்பின், அது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். எனினும், காலையில் நாம் சாப்பிடும் சில உணவுகளின் உதவியுடன் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தலாம். இதில் இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகளைக் காணலாம்

காலையில் வெறும் வயிற்றில் சரியான உணவுகளை சாப்பிடுவது சிறந்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டை ஆதரிக்கவும், சர்க்கரை அதிகரிப்பை நிர்வகிக்கவும் உதவுகிறது

ஆம்லா சாறு

ஆம்லா சாறு அருந்துவது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், கணைய செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது. எனவே இயற்கையாகவே இரத்த சர்க்கரையை நிர்வகிக்க 1 நெல்லிக்காயை தண்ணீருடன் கலந்து குடிக்கலாம்

முளைத்த பச்சைப்பயிறு

காய்கறிகளுடன் அரை கப் அளவிலான முளைத்த பச்சைப்பயிற்றில் நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளது. இது சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

ஊறவைத்த பாதாம் பருப்புகள்

ஊறவைத்த பாதாமில் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை குளுக்கோஸ் வெளியீட்டை மெதுவாக்குகிறது

வெந்தய டீ

1 தேக்கரண்டி வெந்தய விதைகளை சூடான நீரில் வேகவைக்க வேண்டும். இதன் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது இன்சுலின் பதிலை இயற்கையாகவே அதிகரிக்கிறது

இலவங்கப்பட்டை தண்ணீர்

சூடான நீரில் ஒரு சிறிய இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது சர்க்கரை அதிகரிப்பைக் குறைக்கிறது. இது எளிமையான, பயனுள்ள மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும்