சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை..

By Ishvarya Gurumurthy G
09 Sep 2024, 12:39 IST

சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுப்படுத்தும் உணவுகள் இங்கே.

அத்தி இலைகள்

அத்தி இலைகள் ரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் அத்தி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம். இது சர்க்கரை நோயிற்கு ஒரு சிறந்த நிவாரணமாகும்.

வெந்தயம்

வெந்தயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலம் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துக் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்துடன் அந்தத் தண்ணீரை குடிக்கவும். இதற்குப் பிறகு அரை மணி நேரத்திற்கு எதையும் சாப்பிட வேண்டாம்.

பாகற்காய்

பாகற்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.பாகற்காய் உடலில் இன்சுலினை அதிகரிக்கும்.தினமும் காலையில் ஒரு டம்ளர் பாகற்காய் சாறு குடித்து வர ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறையும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்கிறது. ஒரு சிட்டிகை இலவங்கப் பட்டை பொடியை ஒரு டம்ளர் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்துத் தேநீர் போலப் பருகினால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கிரீன் டீ

கிரீன் டீயில் பாலிஃபீனால்கள் உள்ளன.பாலிஃபீனால்கள் ஒரு வலுவான ஆன்டி -ஆக்ஸிடன்ட்.இது ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. மேலும் உடலும் இன்சுலினை சிறப்பாகப் பயன்படுத்த வழிவகுக்கிறது.

இந்த வீட்டு வைத்தியம் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். மேலும் உடல் நலம் தொடர்பான தகவல்களுக்கு onlymyhealth.com ஐ பார்க்கவும்.