சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

By Ishvarya Gurumurthy G
14 Feb 2024, 00:24 IST

நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா? இந்த உணவுகளை கண்டிப்பாக காலையில் சாப்பிட வேண்டும். இது சர்க்கரையை கட்டுப்படுத்தும்.

ஓட்ஸ்

ஓட்ஸில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் இருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாக திகழ்கிறது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

முட்டை

முட்டையில் அதிக புரதமும், குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், முட்டை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவு ஆகும்.

டோஃபு

டோஃபுவில் அதிக அளவு புரதமும், நல்ல கொழுப்புகள் மற்றும் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளன. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் உகந்ததாகும்.

சியா விதை

சியா விதையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

முளைகட்டிய பயிர்

முளைகட்டிய பயிரில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தி இதய நோய் அபாயத்தைத் தடுக்கின்றன.