கோடைகாலத்தில் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சில ஆரோக்கியமான பானங்களை அருந்தலாம்
நீர்
கோடைகாலத்தில் சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்லாமல், அனைவருமே உடலை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம். ஏனெனில் இந்த வெப்பமான காலநிலையில் நீரிழப்பு பிரச்சனை ஏற்படலாம்
மோர்
கோடைக்காலத்தில் அனைவரும் விரும்பி அருந்தும் பானமாக மோர் உள்ளது. இது புரோபயாடிக்குகள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த நல்ல மூலமாகும்
பெர்ரி ஊறவைத்த நீர்
சுவையான பானமாக நீரில் பெர்ரி பழங்களை ஊறவைத்து அருந்தலாம். இதை இனிப்பு சேர்க்காத தண்ணீராக எடுத்துக் கொள்ள வேண்டும்
தேங்காய் நீர்
இந்த இயற்கையான நீரேற்றமிகுந்த பானத்தில் பொட்டாசியம் சத்துகள் நிறைந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க சர்க்கரை ஏற்றம் இல்லாமல் நீரேற்றத்தையும் தருகிறது
புதினா வெள்ளரிக்காய் நீர்
இயற்கையான சுவை மற்றும் புத்துணர்ச்சியை அதிகரிக்கும் வகையில் வெள்ளரி மற்றும் புதினா இலைகள் சேர்க்கப்பட்ட தண்ணீரை அருந்தலாம்
காய்கறி சாறு
பீட்ரூட், கேரட், செலரி போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டு தயார் செய்யப்படும் காய்கறி சாறுகளை அருந்தலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பானமாகும்