சர்க்கரை நோயாளிகள் பயமின்றி ஸ்நாக்ஸ் சாப்பிட இத பாலோப் பண்ணுங்க!

By Kanimozhi Pannerselvam
28 Feb 2024, 21:29 IST

இதை தவிருங்கள்

அதிக கொழுப்பு, அதிக உப்பு மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கேரட், நட்ஸ், வேகவைத்த முட்டைகள், கிரன்ட் பெர்ரி போன்ற சத்தான ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம்.

அளவு முக்கியம்

சிற்றுண்டியாகவே இருந்தாலும் அதன் அளவையும், அதன் மூலம் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து அளவையும் கணக்கிட்டு சிறிது,சிறிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

தயாராக இருங்கள்

ஆரோக்கியமான தின்பண்டங்களை கையில் வைத்திருங்கள். அப்போதுதான் கடைகளி விற்கக்கூடிய செயற்கை இனிப்புச்சுவையூட்டிகள், எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதில் இருந்து தப்பிக்க முடியும்.

வீட்டு உணவுகள்

வீட்டிலிருந்து தின்பண்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் முன்கூட்டியே திட்டமிடுங்கள், இது அளவுக்கு அதிகமாக ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துவதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

மருத்துவ ஆலோசனையை மறக்காதீர்கள்

உங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால், சிற்றுண்டி பற்றிய தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளுக்காக உணவியல் நிபுணர் அல்லது சர்க்கரை நோய்க்கான சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற மறக்காதீர்கள்.