சர்க்கரை நோயாளிகளே., இனிப்பை பார்த்தாலே ஆசையைக் கட்டுப்படுத்த முடியலையா?

By Karthick M
21 Jun 2025, 21:50 IST

இனிப்பு என்பது ஆசை அல்ல போதை என்கிற அளவிற்கு பலருக்கு பிடிக்கும். திடீரென வந்து ஒட்டிக்கொள்ளும் சர்க்கரை நோயால் இனிப்பு மீதான ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுவார்கள்.

குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைவதே முக்கிய காரணம். கணையத்தின் செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒவ்வாமைகளைத் தடுப்பதற்கு குடல் பாக்டீரியாக்கள் முக்கியமானவை.

கால்சியம், மக்னீசியம், துத்தநாகம், தாமிரம் போன்றவை குறைந்தாலும் இனிப்புகளின் மீது ஆசை இருக்கும். நேரத்திற்கு சாப்பிடாமல், மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது இனிப்புக்கு ஆசைப்படுவது வழக்கம்.

நன்றாக உடற்பயிற்சி செய்வதும் நன்றாக தூங்குவதும் சர்க்கரை பசியை குறைக்க உதவும். குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறையும் போது தயிர், இலை கீரைகளைச் சாப்பிடலாம்.

இரும்புச்சத்து குறைவாக இருந்தால், ஹீமோகுளோபின் நிறைந்த உணவுகளை உண்ணலாம். நட்ஸ், விதைகள் மற்றும் நல்ல கரும் பச்சை உணவுகள் நல்லது.