இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் வழிகள்

By Gowthami Subramani
26 Aug 2024, 08:36 IST

ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது. இதில் இயற்கையாகவே இரத்த சர்க்கரையைக் குறைக்கும் சில வழிகளைக் காணலாம்

கரையக்கூடிய நார்ச்சத்துக்கள்

உணவில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இவை இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது

குறைவான கார்போஹைட்ரேட்டுகள்

கார்போஹைட்ரேட் குறைந்த உணவை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை உணவில் சேர்க்க வேண்டும்

குறைந்த கிளைசெமிக் குறியீடு

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுகள் செரிமானம் அடைந்து, மெதுவாக உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் சர்க்கரை அளவு படிப்படியாக உயர்த்துகிறது. எனவே பீன்ஸ், பருப்பு வகைகள் போன்ற குறைந்த ஜிஐ கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இதை தண்ணீரில் கலந்து குடித்து வர இரத்த சர்க்கரையைக் குறைக்கலாம்

மன அழுத்தத்தை நிர்வகிப்பது

நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுப்பதுடன், இரத்த சர்க்கரை அளவை எதிர்மறையாக பாதிக்கலாம். எனவே தியானம், ஆழ்ந்த சுவாசம் உள்ளிட்டவற்றின் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்