மக்னீசியம் நிறைந்த ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய மக்னீசியம் நிறைந்த உணவுகளைக் காணலாம்
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் இரும்பு, மாங்கனீசு மற்றும் தாமிரம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் இது குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்க உதவும் ஃப்ரீபயாடிக் நார்ச்சத்து உள்ளது
நட்ஸ் வகைகள்
பாதாம், மந்திரி போன்றவற்றில் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது
அவகேடோ
இது மக்னீசியத்தின் நல்ல மூலமாகும். மேலும் இதில் பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் கே போன்றவை அதிக அளவில் உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்
இலை கீரைகள்
முட்டைக்கோஸ், கீரை, கொலார்ட் கீரைகள், இலை கீரைகளில் கணிசமான அளவு மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை நீரிழிவு நோய்க்கு நன்மை தருகிறது
பருப்பு வகைகள்
பருப்பு, பட்டாணி, பீன்ஸ், சோயாபீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை போன்றவற்றில் மக்னீசியம் சத்துக்கள் உள்ளது. எனவே இவை சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மையைத் தருகிறது
விதைகள்
ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றில் உள்ள அதிகளவு மக்னீசியம் சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும்
மீன்
கொழுப்பு நிறைந்த மீன் வகைகளில் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், செலினியம், வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது