நீரிழிவு நோயாளிகள் அவர்களின் உணவுமுறையைக் கையாள்வது மிகவும் அவசியமாகும். அதன் படி, நீரிழிவு நோயாளிகள் குறைந்த ஜிஐ மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பைத் தடுக்க உதவுகிறது
பருப்பு வகைகள்
மூங், மசூர், ராஜ்மா போன்ற முழு மற்றும் பிரிக்கப்பட்ட பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பருப்பு வகைகள் குறைந்த GI மற்றும் அதிக நார்ச்சத்துக்கள், புரதம் நிறைந்ததாகும். இது நீரிழிவு மேலாண்மைக்கு சிறந்த தேர்வாகும்
நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள்
பீன்ஸ், கீரை, ப்ரோக்கோலி மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் வயிறு நிரம்பிய முழுமை உணர்வைத் தருவதுடன், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது
பார்லி
அரிசிக்கு மாற்றாக பார்லியை தேர்வு செய்வது நீரிழிவு நோய்க்கு சிறந்த தேர்வாகும். இது குறைந்த ஜிஐ-யைக் கொண்டதுடன், இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது
ஓட்ஸ்
இது கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த காலை உணவு விருப்பமாக அமைகிறது. இதன் நார்ச்சத்துக்கள் குளுக்கோஸின் உறிஞ்சுதலை மெதுவாக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது
வெந்தய விதைகள்
வெந்தய விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் விதைகளுடன் தண்ணீரையும் உட்கொள்ளலாம். இது கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது
நட்ஸ்
பாதாம், வால்நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகளில் புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் நிறைந்ததாகும். இதன் மெதுவான செரிமான செயல்முறை இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்துகிறது
கிரீன் டீ
கிரீன் டீ அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் இரத்த சர்க்கரைக் குறைவு போன்ற நன்மைகளை வழங்குகிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது
ஆளி விதைகள்
இது புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்றதாக அமைகிறது