உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க சில விஷயங்களை செய்யக்கூடாது. அது என்ன தெரியுமா?
உட்கார்ந்தே இருப்பது
இன்றைய காலகட்டத்தில் நாம் உட்கார்ந்த வாழ்க்கை முறைய பின்பற்றி வருகிறோம். இது பல வியாதிகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக இது சர்க்கரை நோயை ஏற்படுத்தும். இதனை தடுக்க தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்க உணவும் பங்கு வகிக்கிறது. நீங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. அதனால், நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது நல்லது.
இரவு உணவில் தாமதம்
இரவு உணவை 7 மணிக்குள் உண்ண வேண்டும். நீங்கள் இரவில் தாமதமாக உணவு உட்கொள்வது, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதனை தடுக்க முடிந்த வரை இரவு உணவை 8 மணிக்குள் உண்ண முயற்சிக்கவும்.
முறையற்ற தூக்கம்
நீங்கள் இரவு சாப்பிட உடன் தூங்குவது அல்லது இரவு தாமதமாக தூங்குவது போன்றவற்றை வழகமாக கொண்டிருந்தால், இது உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இரவு தூக்கத்தை முறையாக தூங்க வேண்டும்.