மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதில் நீரிழிவு நோயும் ஒன்று
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு வீட்டு வைத்தியங்களைக் கையாள்கின்றனர். அந்த வகையில் காலையில் வெறும் வயிற்றில் சில இலைச் சாறுகளை அருந்துவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது
கொய்யா இலை சாறு
கொய்யா இலையில் ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற இரசாயனங்கள் உள்ளது. இதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளது. கொய்யா இலை டீ அருந்துவது இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
ஜாமுன் இலை சாறு
ஜாமுன் இலைகள் இன்சுலின் சுரப்பைத் தூண்டி, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இவை சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகுந்த நன்மை பயக்கும்
கறிவேப்பிலை சாறு
கறிவேப்பிலையில் உள்ள இரும்புச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. இது கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்
சீதாப்பழ இலை சாறு
சீத்தாப்பழ இலைகளில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. இவை கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரித்து, இரத்த சர்க்கரையைக் குறைக்கிறது. இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது
வேப்ப இலை சாறு
வேப்ப இலையில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இதில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளது. இதன் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வருவது இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது