சர்க்கரை நோயாளிகள் இந்த அறிகுறிகள அலட்சியப்படுத்தாதீங்க!

By Kanimozhi Pannerselvam
23 Mar 2024, 09:57 IST

நீரழிவு நியூரோபதியின் வகைகள்

நீரிழிவு நரம்பியல் நான்கு வகைகள் உள்ளன. புற நரம்பியல், தன்னியக்க நரம்பியல், ப்ராக்ஸிமல் நியூரோபதி, ஃபோகல் நியூரோபதி

நரம்புகளில் சேதம்

நீரிழிவு நரம்பியல் பொதுவாக கைகள் மற்றும் கால்களில் உள்ள நரம்புகளை சேதப்படுத்தும். இது இதயம், இரத்த நாளங்கள், செரிமான அமைப்பு மற்றும் பிறப்புறுப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

புற நரம்பியல் நியூரோபதி அறிகுறிகள்

அதிக வலி, கால்களில் கூச்ச உணர்வு, அதிக உணர்திறன், தசை பலவீனம், எலும்பு மற்றும் மூட்டுகளில் சேதம் ஏற்படுவது.

ப்ராக்ஸிமல் நியூரோபதி அறிகுறிகள்

பின்புறம் அல்லது தொடையில் கடுமையான வலி, உட்கார்ந்து எழுவதில் சிரமம், வயிற்று வலி, மார்பகவலி, தொடை தசைகளில் பலவீனம்

தன்னியக்க நரம்பியல் அறிகுறிகள்

குமட்டல், வாந்தி, பசியின்மை, பாலியல் பிரச்சனைகள், அதிக வியர்வை, UTI தொற்று, சிறுநீர் பிரச்சனைகள், மலச்சிக்கல், ரத்த சர்க்கரை அளவு குறைவது

ஃபோகல் நியூரோபதி அறிகுறி

கண்களை கவனம் செலுத்துவதில் சிரமம், முகத்தின் ஒரு பக்கத்தில் பக்கவாதம், தாடை அல்லது காலில் வலி தொடையின் முன் பகுதியில் வலி