தற்போது வெயில் வாட்டி வரும் வேலையில் கரும்பு ஜூஸ் மீது நாட்டம் திரும்பு வருகிறது. ஆனால் இதனை சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?
கரும்புச் ஜூஸ் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட இயற்கையான பானமாகும். இது தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 மற்றும் சி, துத்தநாகம், மாங்கனீசு, கால்சியம் மற்றும் இரும்பு போன்ற முக்கிய தாதுக்களைக் கொண்டுள்ளது.
கரும்பு சாறு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், இதில் சர்க்கரை அதிகமாக உள்ளது. ஒரு கார்போஹைட்ரேட் உடல் குளுக்கோஸாக உடைந்து, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்.
250 மில்லி கரும்பு ஜூஸில் 50 கிராம் சர்க்கரை உள்ளது. இது 12 டீஸ்பூன் சர்க்கரைக்கு சமம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படலாம் என்றாலும், இது மிகச் சிறிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கரும்பு ஜூஸில் கிளைசெமிக் ஐஇன்டெக்ஸ் குறைவாக இருந்தாலும், இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது. குறைந்த சர்க்கரை அளவு கொண்டவர்கள் இதனை உட்கொள்ளலாம்.