நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உணவுமுறைகளைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும். அதன் படி, நீரிழிவு நோயாளிகள் பப்பாளி உட்கொள்ளலாமா என்பது குறித்து காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
பப்பாளியில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன
இன்சுலின் உணர்திறன் மேம்பாடு
பப்பாளியில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்
இதில் பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை நீரிழிவு நோய் தொடர்பான சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ்
பப்பாளியில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) 60 உள்ளது. அதாவது இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தாது
எளிதில் செரிமானம் அடைவது
பப்பாளியில் சைமோபபைன் மற்றும் பப்பைன் போன்ற என்சைம்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகளை எளிதில் ஜீரணிக்கக் கூடிய வடிவில் உடைக்கிறது. இவை இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது
மருத்துவ ஆலோசனை
எனினும், நீரிழிவு நோயாளிகள் உணவில் பப்பாளியைச் சேர்ப்பதற்கு முன், மருத்துவர் அல்லது நீரிழிவு சிகிச்சைக் குழுவுடன் கலந்தாலோசிக்க வேண்டும்