நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரஞ்சு ஒரு நல்ல தேர்வாகும். இதனை மிதமாக உட்கொள்ளும் போது, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது
வைட்டமின் சி நிறைந்த
ஆரஞ்சு வைட்டமின் சி நிறைந்த சிறந்த மூலமாகும். இது நீரிழிவு நோயாளிகளின் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
அதிக நார்ச்சத்துக்கள்
ஆரஞ்சுப் பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கி, இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது
குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ்
ஆரஞ்சுகள் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டிருப்பதால், இவை நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது
எப்படி எடுத்துக் கொள்வது?
ஆரஞ்சு பழச்சாறுகளை விட அதன் முழு வடிவத்தில் சாப்பிடுவது சிறந்தது ஆகும். ஆரஞ்சு சாற்றை விட முழு ஆரஞ்சுகளில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த செறிவூட்டப்பட்ட சர்க்கரை உள்ளது
பகுதி அளவு முக்கியம்
ஆரஞ்சு ஆரோக்கியமாக இருப்பினும், பகுதி கட்டுப்பாடு முக்கியமானது. மிதமான அளவில் உட்கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்திற்கான நன்மைகளைப் பெறலாம்