சர்க்கரை நோயாளிகள் சோறு சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என கூறப்படுகிறது. இது உண்மையா? சர்க்கரை நோயாளிகள் சாதம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நிபுணர்கள் கருத்து
நமது பொதுவான உணவில் அரிசி என்பது மிக முக்கியமான பகுதியாக இருக்கிறது. உடல் இதிலிருந்து பல ஊட்டச்சத்துக்களை பெறுகிறது. இது சரியா? தவறா? என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா காந்தி கூறியது குறித்து பார்க்கலாம்.
சர்க்கரை நோய் எப்போது வரும்?
நீரிழிவு நோய் என்பது உடலில் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யப்படாத ஒரு நிலையாகும். இரத்த குளுக்கோஸ் உடலில் சரியாக சேமிக்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம். இது நீரிழிவு நோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
சாதம் சாப்பிடலாமா? வேண்டாமா?
உடலுக்கு கார்போஹைட்ரேட் மிக தேவை. அரசியில் நல்ல அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. அத்தகைய நிலையில் நீங்கள் உணவில் இருந்து அரிசியை விலக்கி வைக்க முடியாது.
பாஸ்மதி அரிசி
நீரிழிவு நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் பாஸ்மதி அரிசியை உட்கொள்ளலாம். இந்த அரசியில் கிளைசெமிக் குறையீடு குறைவாகவே உள்ளது. இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் ஆபத்தும் குறைகிறது.
வெள்ளை அரிசி சாப்பிடுவதை தவிர்க்கவும்
வெள்ளை அரிசி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இது டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே அரிசி சாப்பிடாமல் இருப்பது நல்லது.