நீரிழிவு நோய்க்கு உதவும் வெண்பூசணி ஜூஸ். எப்படி தெரியுமா?

By Gowthami Subramani
26 Dec 2023, 11:13 IST

நீரிழிவு நோய் குணப்படுத்த முடியாத நோயாக இருப்பினும், அன்றாட உணவுமுறை மற்றும் சில பழக்க வழக்கங்களால், அதைக் கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் நீரிழிவு நோய்க்கு வெண்பூசணி சாறு நல்ல தேர்வாகும்

ஏன் வெண்பூசணி

வெண்பூசணி குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்பற்ற பழமாகும். மேலும், இதில் சில ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி, இரும்பு போன்றவை நிறைந்துள்ளன

குறைந்த கிளைசெமிக் குறியீடு

பூசணிக்காயில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிகக் குறைவாக உள்ளது. இதை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது

ஊட்டச்சத்துகள் நிறைந்த

இதில் சர்க்கரை நோயாளிகளுக்கான வைட்டமின் சி, பி-காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமிங்கள் மற்றும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை நீரிழிவு நோயாளிக்கு உகந்த நல்வாழ்வைத் தக்க வைக்க உதவுகிறது

நார்ச்சத்துக்கள் நிறைந்த

வெண்பூசணி நார்ச்சத்துக்கள் நிறைந்த நல்ல மூலமாகும். இவை இரத்த ஓட்டத்தில் உள்ள சர்க்கரைகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் உறிஞ்சுதல் விகிதத்தை தளர்த்துகிறது. மேலும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது

நீரேற்றமிக்க

வெண்பூசணியில் நல்ல அளவிலான நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை உடலுக்குத் தேவையான சரியான நீரேற்றத்தை அளிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் உட்பட அனைவரும் நீரேற்றமாக இருக்க மற்றும் சிறுநீரக செயல்பாட்டை பராமரிக்க வெண்பூசணி சாற்றை அருந்தலாம்